சூளகிரி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கல்லூரி மாணவி வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது கே.என்.தொட்டி ஊராட்சி. தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இவ்வூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி (21) போட்டியிட்டார்.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று (ஜன.2) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இதில் ஜெய்சந்தியா 1,170 வாக்குகளும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் 950 வாக்குகளும் பெற்றனர். ஜெய்சந்தியா 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்சந்தியா ராணி, கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, ஏற்கெனவே கே.என்.தொட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago