உள்ளாட்சித் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி; இந்திய அளவில் இதுவே முதல் முறை

By பார்த்திபன்

நாமக்கல் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இவரே, இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் 14 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் 5,000 வாக்குகள் உள்ளன. கருவேப்பம்பட்டி ஊராட்சியை உள்ளடக்கிய இந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திருநங்கை ரியாவை (30) மாவட்ட திமுக தேர்வு செய்தது. அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் - சின்னபாப்பா தம்பதியினர், ரியாவின் பெற்றோர் ஆவர். இதையடுத்து திருநங்கை ரியா, திமுக சார்பில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று (ஜன.2) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இந்த தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்