கரூர் மாவட்டத்தில், வார்டு உறுப்பினர் பதவியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளர் ஒருவர் அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று (ஜன.2) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், ரெங்கநாதபுரம் ஊராட்சி 1-வது வார்டில் சாவி சின்னத்தில் புனிதா என்பவரும், சீப்பு சின்னத்தில் உஷா என்பவரும் போட்டியிட்டனர்.
கரூர் மாவட்டம் புலியூர் ராணி மெய்யம்மை மெட்ரிக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது, புனிதாவின் கணவர் கந்தசாமி அவரது முகவராக வந்திருந்தார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புனிதா 321 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உஷா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து கண் கலங்கிய உஷா, அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago