சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் முதற்கட்டமாக 60 தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டதில் உரிய ஆவணங்களை முறையாக வைக்காததால் 58 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
60 வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக கடந்த டிச.27-ல் 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.
பின்னர் டிச.30-ல் கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய 7 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (ஜன.2) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக 60 தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டதில் உரிய ஆவணங்களை முறையாக வைக்காததால் 58 ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையில் தாமதம்..
இதேபோல், சிவகங்கை ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னர் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது முகவர்கள் அழைத்து வர வேண்டிய பகுதியில் கூட்டம் அதிகமானதால் குளறுபடி ஏற்பட்டு வார்டு வாரியாக உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். முகவர்கள் வருகை தாமதமானதால் வாக்கு எண்ணும் பணியில் 30 நிமிட தாமதமாக தொடங்கியது. தற்போது, வாக்கு பெட்டிகளை திறந்து வகைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
போதிய பயிற்சி இல்லாத பெண் ஊழியர்கள் வாக்கு பெட்டிகளை திறக்க திண்டாடினர் 10. மணி வரை தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கவில்லை
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago