சென்னையில் செயின் பறிப்புச் சம்பவங்கள் குறைந்துள்ளன: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 

By செய்திப்பிரிவு

சென்னையில் சிசிடிவி கேமராவினால் செயின் பறிப்புச் சம்பவங்கள் 50% குறைந்துள்ளன என்று மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு குற்றங்கள் 2019-ல் 50% குறைந்துள்ளன. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன.

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் சென்னை காவல்துறை சிறந்து விளங்குகிறது. காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் 10 லட்சம் பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

வெளிமாநில குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதாய கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. விபத்துகளில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்