குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசின் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறவலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் அம் மாநில முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றி பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.

ஆகவே, வரும் ஜனவரி 6-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்