இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலை வழக்கு; தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம்: சென்னை காவல்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 2014 ஜூன் மாதம் 18-ம் தேதி இரவு 10.30 மணிக்கு, அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தை மூடிவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியது.

இதுகுறித்து, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்தனர். சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய அப்போதைய இணை ஆணையர் சண்முகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாரின் விசாரணையில் சுரேஷ்குமார் தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை செய்யப்படவில்லை. அவர் இந்து முன்னணி கூட்டங்களில் பேசிய பேச்சால் ஆத்திரம் அடைந்தவர்கள் திட்டமிட்டு, கொலை திட்டத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

கொலை தொடர்பாக பெங்களூருவில் பதுங்கி இருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த சையது அலி நவாஸ் (25), கன்னியாகுமரியைச் சேர்ந்த அப்துல் சமீம் (25) மற்றும் அவரது கூட்டாளி காஜா மொய்தீன் (47) உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அப்துல் சமீம், சையது அலி நவாஸ், காஜா மொய்தீன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். அதற்குப் பிறகு, அவர்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள 3 பேர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. மேலும், தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையம் - 94981 00079, ஆய்வாளர் - 9840302266, காவல் கட்டுப்பாட்டு அறை - 044 23452377, 9498181238 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்