தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படு கின்றன.
தமிழகத்தில் சென்னை உள் ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர மீத முள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டங் களாக கடந்த டிச.27 மற்றும் 30-ம் தேதி களில் வாக்குப்பதிவு நடை பெற்றது. முதல் கட்டமாக டிச.27-ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து, 2-ம் கட்ட தேர்தல் 158 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த டிச.30-ம் தேதி நடைபெற்றது. மேலும், முதல் கட்ட தேர்தலின்போது வாக்குச்சீட்டு மாற்றி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நிறுத்தப்பட்ட 30 வாக்குச் சாவடிகளுக்கான மறு வாக்குப் பதிவும் அன்றைய தினம் நடை பெற்றது. இதில் 158 ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும், 30 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவில் 72.70 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் மற்றும் கன்னி யாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப் பட்ட மின்னணு இயந்திரங்கள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப் பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற் கிடையில், 2-ம் கட்ட தேர்தலில் வாக்குச்சீட்டு மாற்றி கொடுக்கப் பட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மதுரை, தேனி, நாகை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 9 வாக்குச் சாவடி களில் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் 27 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 315 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண் ணிக்கை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 27 மாவட் டங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதற்கான தேதியும் ஜன.4-ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், தமிழக தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தலைமையில் வாக்கு எண்ணிக்கைக் கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 27 மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம், தேர்தல் ஆணையர் கலந்துரையாடினார். குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து விவாதித்தார். அப்போது, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இல.சுப்பிரமணியன், தேர்தல் பிரிவு ஐ.ஜி. சேஷசாயி, தேர்தல் பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago