தேனி மாவட்டம் போடி ஒன்றியம் உப்புக்கோட்டை 8-வது வார்டு உறுப்பினர்க்கான மறுதேர்தல் நாளை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் போடி ஒன்றியம் உப்புக்கோட்டை ஊராட்சி 8-வது வார்டில் ஊராட்சி வார்டு உறுப்பினர்க்கான வாக்குப்பதிவு நடந்தது.
இதில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் 4 சின்னங்களுக்குப் பதிலாக 3 சின்னங்களே வாக்குச்சீட்டில் இடம் பெற்றிருந்தது.
மொத்தம் 419 வாக்குகளில் 335 வாக்குகள் பதிவான நிலையில் தவறுகள் கண்டறியப்பட்டது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனவே 8-வது வார்டிற்கு மறுதேர்தல் நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பல்லவிபல்தேவ் பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் தேர்தல் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதற்கான மறுவாக்குப்பதிவு நாளை (புதன்) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வார்டிற்கான மறுதேர்தல் பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியில் (கிழக்கு கட்டடம்) காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago