மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததையடுத்து, திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஒன்றியங் களுக்கு முதற்கட்டத் தேர்தல் கடந்த டிச.27-ம் தேதி நடந்தது.

நேற்று 2-ம் கட்ட தேர்தல் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடந்தது.

இந்நிலையில், திருநகர் சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்னும் மையத்தை மாவட்ட ஆட்சியர் வினய், தேர்தல் பார்வையாளர் சுப்பையன், ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தேர்தல் அலுவலரிடம் ஆலோசனை செய்து அது குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

ஜன.2-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்று இரவுக்குள் முடிவுகள் வெளியாகும்.

மதுரையில் நடைபெற்ற 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 75.8 I% வாக்குகள் பதிவாகின. மதுரையில் நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவில் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் மட்டுமே குறைந்த அளவு வாக்குப் பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்