சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் வாக்குச்சாவடியில் மூதாட்டி ஒருவர் தான் கொண்டு வந்த ஆதார் அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை வாக்குச்சீட்டுடன் சேர்த்து வாக்குப்பெட்டியில் செலுத்தினார்.
அதேபோல், வாக்குச்சீட்டில் முத்திரை குத்திய சின்னத்தை கிழித்து வாக்குப்பெட்டியில் செலுத்திவிட்டு, மீதி சின்னங்கள் அடங்கிய சீட்டுடன் வாக்காளர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற ருசிகர சம்பவம் நடந்தது.
காரைக்குடி பழைய செஞ்சையைச் சேர்ந்தவர் சின்னக்காளை. இவர் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். அப்போது அவருக்கு மாவட்டக் கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குச்சீட்டுகள் கொடுக்கப்பட்டன.
அவர் தான் விரும்பிய சின்னங்களில் வாக்களித்தபின், வாக்குச்சீட்டில் வாக்களித்தபின், முத்திரை குத்திய சின்னத்தை மட்டும் கிழிந்து வாக்குப் பெட்டிக்குள் செலுத்திவிட்டு, மீதி சின்னங்கள் அடங்கிய சிட்டையுடன் வீட்டிற்கு சென்றார்.
இதையறிந்த சிலர், அவரது தவறை சுட்டிக்காட்டினர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆதார் அட்டையையும் வாக்குப்பெட்டிக்குள் போட்ட மூதாட்டி..
அதேபோல் அதே வாக்குச்சாவடியில் மூதாட்டி ஒருவர் தான் கொண்டு வந்த ஆதார் அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை வாக்குச்சீட்டுடன் சேர்த்து வாக்குப்பெட்டியில் செலுத்தினார்.
இதுகுறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டபோது, இனி வாக்கு எண்ணிக்கையின்போது தான் பெட்டி திறக்கப்படும். அப்போது தான் ஆதார் அட்டை கிடைக்கும் எனத் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றத்துடன் மூதாட்டி திரும்பிச் சென்றார்.
மேலும் இதே வாக்குச்சாவடியில் 13 திருநங்கைகள் ஒரே சமயத்தில் ஆர்வமுடன் வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago