மர்மக் காய்ச்சலுக்கு தேனி ஊராட்சி ஒன்றிய வார்டு பெண் வேட்பாளர் பலி: உறவினர்கள் சோகம்

By என்.கணேஷ்ராஜ்

தேனியில் நடந்து முடிந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு பெண் வேட்பாளர் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியப்பகுதியில் கடந்த 27ம் தேதி முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் கோடாளியூத்து கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பவுன்தாய்(49) தும்மக்குண்டு வார்டில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு அமமுக சார்பில் போட்டியிட்டார். இந்த வார்டில் திமுக சார்பில் சித்ரா, அதிமுக.சார்பில் ரோஜா ஆகியோரும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் அமமுக வேட்பாளர் பவுன்தாய் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்சினையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்துமா தொந்தரவுடனேயே அவர் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இவரது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் இவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இண்றி அவரது உயிர் பிரிந்தது.

தேர்தல் முடிவடைந்து ஓட்டு எண்ணிக்கைக்கு சில நாட்கள் உள்ள நிலையில் வேட்பாளர் இறந்தது இப்பகுதி வாக்காளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்