ராமநாதபுரம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடங்கூட்டம் வாக்குச் சாவடியில் வெளியூர் நபரை முகவராக நியமித்ததால் அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் முதல் வயதான வாக்காளர்கள் வரை மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடங்கூட்டம் வாக்குச்சாவடியில் வெளியூர் நபரை வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
460 வாக்குகள் உள்ள இந்த வாக்குச்சாவடியில் ஒருவர்கூட வாக்கு பதிவு செய்யவில்லை. பின்னர் வாக்குச் சாவடிக்கு கிராம நிர்வாக அலுவலரும், வட்டாட்சியரும் நேரில் சென்று வாக்காளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் 4 மணி நேரத்திற்கு பிறகு வேடங்கூட்டம் வாக்கு சாவடியில் கிராம நிர்வாக அலுவலர்களை வைத்து வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago