வேண்டாம் சிஏஏ-என்ஆர்சி: ஸ்டாலின், கருணாநிதி இல்லங்களில் கோலம்; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன பின்னணி

By செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக கோலம் போட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள் இந்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று (டிச.29) தெருக்களில் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். 'நோ என்ஆர்சி', 'நோ சிஏஏ' என்ற வாசகத்துடன் பெண்கள் கோலமிட்டனர். இதையடுத்து, கோலம் போட்ட பெண்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

கோலம் போட்டதற்கு பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், திமுக மகளிரணியினர் என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக, தங்கள் வீடுகளில் கோலங்கள் போட்டு எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கனிமொழியின் சென்னை, தூத்துக்குடி இல்லங்களின் வாசல்களிலும் இத்தகைய கோலங்கள் போடப்பட்டுள்ளன. இதுதொடர்பான, dmkkolamprotest, KolamAgainstCAA என்ற ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், ஸ்டாலினின் இல்லம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இல்லம் ஆகியவற்றிலும் 'வேண்டாம் சிஏஏ - என்ஆர்சி' என கோலம் போடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் இல்லத்தில் சிஏஏ எதிர்ப்பு கோலம்

இந்தப் புகைப்படங்களை 'எங்கள் இல்லத்தில்' எனக் குறிப்பிட்டு ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொதுமக்கள் பலரும் தங்கள் இல்லங்களில் கோலம் போட்டு எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல தமிழ்நாடு காங்கிரஸின் மகளிர், சிறுபான்மை உள்ளிட்ட அணியினரும் இந்தக் கோலப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்