திமுக பிரமுகருக்கு சொந்தமான பங்களாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: தலைமறைவான 4 பேரை பிடிக்க போலீஸார் தீவிரம்

By செய்திப்பிரிவு

கோவை வடவள்ளி, தொண்டா முத்தூர் சாலை, ஜெயலட்சுமி நகரில் திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு, ஷேக், ரஷீத், கரும்புக்கடையைச் சேர்ந்த பெரோஸ் ஆகியோர் வாடகைக்கு தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்களிடம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் இருப்பதாகவும், ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்குப் பதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பழைய நோட்டுகளை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த பலர் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பி வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணண் தலைமையிலான வடவள்ளி காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அந்த பங்களாவில் சோதனை நடத்தினர். இதில் பங்களாவில் உள்ள அறைகளில் இருந்து 268 கட்டுகள் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் மொத்தம் ரூ. 2.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

667 கட்டுகளின் மேல் முதல்தாள் மற்றும் கடைசி தாள்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் அதன் இடையே காகித தாள்களும் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய 4 பேரும் தப்பி விட்டனர். அவர்கள் மீது வடவள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த பழைய நோட்டு கட்டுகளை யார் கொடுத்தது, இதுவரை எவ்வளவு மாற்றப்பட்டுள்ளது என்பது தொடர் பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்