குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கனிமொழி எம்.பி. வீட்டு வாசலில் கோலம்

By ரெ.ஜாய்சன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி. கனிமொழி வீட்டு வாசலில் கோலம் வரையப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் திமுக சென்னையில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பேரணி நடத்தியது.

தொடர்ந்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழியின் தூத்துக்குடி இல்லத்தின் வாசலில் என்.ஆர்.சி, என்.பி.ஆர்-க்கு எதிராக கோலம் வரையப்பட்டுள்ளது.
முன்னதாக, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதில் கலந்துகொண்ட ஏழு பேர் காவலில் எடுக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தியவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டு வாசலில் வண்ணக் கோலம் வரையப்பட்டு 'வேண்டாம் CAA, NRC' என்று எழுதப்பட்டுள்ளது. கனிமொழி தற்போது தூத்துக்குடி இல்லத்தில் இல்லை. ஆனால் அவர் உத்தரவின் பேரிலேயே கோலம் வரையப்பட்டதாக பணியாட்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், மதுரையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசியின் வீட்டு வாசலிலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான வாசகத்துடன் கோலம் இடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்