மத்தியில் ஆளும் பாஜகவுக்கு யார் அடிபணிவது என்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மதிமுக பொதுச் செய லாளர் வைகோ கூறினார்.
இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பிரமுகர் ஒருவர் பெண் வாக்காளர்களை அத்துமீறி அழைத்துச் சென்று அவர்களது வாக்குகளை வாக்குப்பெட்டியில் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கடு்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதுபோல் முறைகேடுகள் நடக்கும் என்று திமுக ஏற்கெனவே குற்றம் சாட்டி உள்ளது. இதனால், வாக்கு எண்ணும்போது முறைகேடு நடந்துவிடக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். மத்தியில் ஆளும் கட்சிக்கு யார் அடிபணிவது என்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
இவ்வாறு வைகோ கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago