சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்அதன் மதுரை கிளையில் வழக்கறிஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வழக்கு பட்டியல் புத்தகம் நேரில் விநியோகம் செய்வது ஜன.1 முதல் நிறுத்தப்படுகிறது. இதற்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளின் பட்டியல் ஒரு புத்தகமாக (காஸ்ட் லிஸ்ட்) வழக்கறிஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தினமும்காலையில் விநியோகம் செய்யப்படும். இதுதவிர முதல் நாள் இரவில் இணையதளத்திலும் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த புத்தகத்தில் நீதிமன்றம் வாரியாக விசாரணைக்கு வரும் வழக்குகளின் எண், மனுதாரர் பெயர், வழக்கறிஞரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் வழக்கறிஞர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு காலையில் நேரில் விநியோகம் செய்யப்படும். இச்சேவைக்கு மாதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் தொடங்கிய நாளில் இருந்து அமலில்இருந்து வரும் வழக்கு பட்டியல் புத்தகம் விநியோகம் செய்யும் நடைமுறை ஜன.1 முதல் நிறுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் அனைத்து நீதிபதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில்செலவுகளை குறைக்கும் வகையில் வழக்கு பட்டியல் புத்தகம் விநியோகிப்பதை ஜன.1 முதல் நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற பதிவாளர் கடிதம்
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்துக்கும் உயர் நீதிமன்ற பதிவாளர் எம்.ஜோதிராமன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் ஜன.1 முதல் வழக்கு பட்டியல் புத்தகம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் நிதித்சுமையை குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தினமும்தலா 2 வழக்கு பட்டியல் புத்தகம் வழங்கப்படும். இதனை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
வழக்கு பட்டியல் புத்தகம் நிறுத்தப்படுவதற்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற கிளை பார் அசோசியேஷன் பொதுச்செயலர் என்.இளங்கோ கூறியதாவது:
பட்டியல் புத்தகம் வழக்கறிஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகிப்பது நிறுத்தப்பட்டு, சங்கங்களுக்கு மட்டும் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்டதூரத்தில் இருந்து வரும் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இணையதளத்தில் பார்க்கும் வசதி இருந்தபோதிலும், பல நேரங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக வழக்குபட்டியலை பார்க்க இயலாத நிலையேஉள்ளது. மேலும், மூத்த வழக்கறிஞர்கள் பலர் பட்டன் செல்போனை பயன்படுத்துகின்றனர். அவர்களால் இணையதளத்தில் வழக்கு பட்டியலை பார்க்க முடியாது.
வழக்கு பட்டியல் தயாரிப்புக்கான தொகையை அரசு தான் வழங்குகிறது. வழக்கறிஞர்களும் கட்டணம் செலுத்துகின்றனர். இதனால் உயர் நீதிமன்றத்துக்கு நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பில்லை.
எனவே பழைய முறைப்படி வழக்கு பட்டியல் புத்தகத்தை வழக்கறிஞர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு நேரில் விநியோகம் செய்ய தலைமை நீதிபதி, பதிவாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago