ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நான்தான் உரிமையாளர்என்று யாராலும் கூற முடியாது என அமமுகவில் செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார்.
சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஜெயலலிதாவின் சொத்துகளை மற்றவர்கள் எடுத்துக் கொள்வதை தமிழக மக்கள் ஒருவர்கூட விரும்ப மாட்டார்கள். எனவே, அவரின் அனைத்து சொத்துகளையும் நாட்டுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் சொத்துகள் மக்களுக்கு பயன்பட வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்கு நான்தான் வாரிசுதாரர், உரிமையாளர் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஜெயலலிதா இறந்தபின்னர் அவரின் சொத்துகளுக்கு உரிமை கோருகிறவர்கள் நீதிமன்றத்தை நாடிகொள்ளட்டும். அவர் உயிரோடு இருந்தபோது எந்த உறவினர்களும் அவருடன் இல்லை. ஜெயலலிதாவின் சொத்துகள் வேறு யாருக்கும் செல்லக்கூடாது என நான்எதிர்ப்பதால் மிரட்டல்கள் வரவாய்ப்புள்ளது. அதை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்.
கொடநாடு விவகாரத்தில் நீதிமன்ற விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும். அதிமுக-வில் இணைவதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. அதற்கான நேரம் வந்தவுடன் நிச்சயமாக அதிமுகவில் இணைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago