இந்து சமய அறநிலையத் துறைஇணையதளத்தில் 77 கோயில்களின் முப்பரிமாண காட்சியை பக்தர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். எனவே, பக்தர்களின் வசதிக்காக பூஜைகளை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்வது, இ-உண்டியலில் காணிக்கை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலையத் துறையின்இணையதளத்தில் ஏற்படுத்தப் பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கோயில்களின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சியின் மூலம் பக்தர்கள் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் 77 கோயில்களின் முப்பரிமாண காட்சியை பக்தர்கள் பார்க்கும் வசதி இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத் துறை யின் இணையதளத்தில் கோயில் களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை முப்பரிமாண காட்சி மூலம் பார்க்கும் வகையில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது.
முப்பரிமாண காட்சியின் மூலம் பார்க்கும்போது கோயிலை, சுற்றிப் பார்க்கும் உணர்வு பக்தர்களுக்கு ஏற்படும். தற்போதைக்கு 77 கோயில்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி படிப்படியாக அனைத்து முக்கிய கோயில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago