நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து மக்களை மதரீதியாக பிரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இயக்கத்தின் 135-வது ஆண்டு நிறுவனநாள் விழாவையொட்டி அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் கட்சிக் கொடியை ஏற்றினார்.
இதையடுத்து, மின்ட் பாரத் திரையரங்கம் அருகில் இருந்து வண்ணாரப்பேட்டை அன்னை சிவகாமி பூங்கா வரை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் சத், சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
பேரணி முடிவில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
தமிழக அரசுக்கு சான்றிதழ் கொடுக்கும் அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த இந்திய அரசியல் சாசன சட்டத்தை வீதியில் வீசுகிறது மத்திய அரசு. மக்களை மத ரீதியாக பிரித்து இந்திய கலாச்சாரத்தை சீரழிக்க பாஜக முயற்சிக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு அதிமுக, பாமக ஆதரவாக ஓட்டளித்து வெற்றிபெற வைத்துள்ளன. சுயமரியாதை இல்லாத அரசாங்கமாக அதிமுக அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது, ‘‘ஆதார், ஜிஎஸ்டி, தேசியகுடிமக்கள் பதிவேடு என்று காங்கிரஸ் கொண்டுவந்த அத்தனைதிட்டங்களையும் விருப்பத்துக்குக்கு ஏற்ப திருத்தி, ஜனநாயகத்தை பாஜக அரசு சீர்குலைத்துவிட்டது. ஊழலில்முதலிடத்தில் உள்ள தமிழக அரசுக்கு நட்புறவின் அடிப்படையில் மத்திய அரசு நல்லாட்சி சான்று வழங்கி உள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago