மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்க விண்ணப்பங்களை விநி யோகிக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது.
மீன்பிடிப்பதற்கு படகு, வலை கள், படகுகளை இயக்குவதற் கான இன்ஜின் உள்ளிட்டவற்றை லட்சக்கணக்கில் செலவு செய்து மீனவர்கள் வாங்கி வருகின்றனர். இவற்றுக்கு தேவையான பணத்தை தயார் செய்ய வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனால், மீனவர்கள் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குவதை போல், மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மீன்வளத் துறை முடிவு செய்தது.
இந்த கடன் அட்டையை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிப்பு மற்றும் மீன்வளர்ப் புக்கு தேவையான பொருட்களை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள் ளது. இந்த கடன் அட்டையை பெறுவதற்கான விண்ணப்பங் களை விநியோகிக்கும் பணி தமிழ கம் முழுவதும் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: கடன் அட்டையை பெற விரும்பும் மீனவர்களுக்கு விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆதார் நகல், ஸ்மார்ட் குடும்ப அட்டை நகல், படகு பதிவு சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப் பத்தை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட உதவி இயக்குநர்களிடம் மீனவர்கள் அளிக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பரி சீலனை செய்து தகுதியான பய னாளிகளுக்கு கடன் அட்டை வழங்கப்படும். மீன்பிடி தொழில் களுக்கு தேவையான வலைகள், டீசல் உள்ளிட்டவற்றை வாங்க கடன் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம். தகுதியான மீன வர்களுக்கு வருடத்துக்கு அதிக பட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும். கடனுக்கான வட்டியை அந்தந்த வங்கிகள்தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago