குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து தமிழக மக்களுக்கு அதிமுக அரசு துரோகம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் கருத்து

By அ.அருள்தாசன்

குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் தமிழக மக்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்திருக்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளதன்மூலம் மத்திய அரசு மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. சமயசார்பற்ற நாட்டில் மக்களை மதரீதியாக பிரிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

மறைமுகமாக இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்க இதுவே முன்னோடி. இச் சட்டத்தை திருத்த வேண்டும் அல்லது திரும்பப்பெற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எங்கள் கட்சி சார்பில் முதல் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட தமிழக அரசு ஆதரவு தெரிவித்தது பெரிய சாபக்கேடு. தமிழக மக்களுக்கு அதிமுக அரசு துரோகம் செய்திருக்கிறது. இதற்காக மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.

அதிமுக அரசின் செயல்பாட்டுக்கு மத்திய அரசு முதலிடம் தந்துள்ளதை மக்கள் ஏற்கவில்லை. பொருளாதார ரீதியில் நாடு பெரும் சிக்கலில் இருக்கும் நிலையில் அதை தீர்க்க வழிதேடாமல் மக்களை திசைதிருப்பும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டிலுள்ள 20 கோடி முஸ்லிம்களையும் மத்திய அரசு பந்தாடுகிறது.

இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 15 விவரங்களை மட்டுமே சேகரித்தனர். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 21 விவரங்களை சேகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொருவரும் தங்கள் தாய், தந்தையரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை சொல்ல வேண்டும் என்ற அம்சத்தை இந்த கணக்கெடுப்பில் சேர்த்துள்ளனர்.

இது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் காணப்படும் குழப்பங்களை நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கட்சியின் மாநில பொருளாளர் ஷாஜஹான், செயலாளர் நிஜாமுதீன், மாவட்ட தலைவர்கள் எல்கேஎஸ் முகம்மது மீரான், முகைதீன், செய்யது சுலைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்