பதிவு உரிமத்துக்கு விண்ணப்பிக்காத 30,000 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: தமிழக சுகாதாரத் துறை திட்டம்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் பதிவு உரிமத்துக்கு விண்ணப்பிக்காத 30 ஆயிரம் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் பதிவுஉரிமம் பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

அப்படி பெறும் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்ட நிலையில், 40 ஆயிரம் மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன.

விண்ணப்பித்த மருத்துவமனைகளில் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பதிவு உரிமத்துக்கு விண்ணப்பிக்காத 30 ஆயிரம் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியிலும் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பதிவு உரிமம் திட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பதிவு உரிமத்துக்காக விண்ணப்பித்த மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை வசதிகள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆய்வுகள் செய்யப்படு கின்றன.

அதேநேரத்தில் பதிவு உரிமத்தில் சிறிய அளவிலான திருத்தம்செய்யப்படவுள்ளது. அதாவது, மருத்துவமனைகள் பற்றி விளம்பரம் செய்வதற்கு முன்பு, அதுகுறித்த தகவலை சுகாதாரத்துறையிடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்னரே விளம்பரம் செய்ய வேண்டும் என்பது போன்ற சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்