விருதுநகரில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதற்கட்டமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
5 ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என 1861 பதவிகளுக்கு 5228 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள 10,43,582 வாக்காளர்களில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 5,54,719 வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றியங்களில் 1028 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
7774 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் உள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி சுற்றியுள்ள கிராமப் புறங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர் வாக்களித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago