தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளைக் கடந்தாலும் சுனாமி பாதிப்புக்குள்ளான மீனவ குடும்பங்களுக்கு அரசு அறிவித்த வீடுகூட இதுவரை கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.
சுனாமி என்ற வார்த்தையையே அறிந்திராத காலம் அது. கடல் சீற்றத்தை மட்டுமே பார்த்து பழக்கிய தமிழக கடலோர மீனவர்களுக்கு, கடந்த 2004-ம்ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. என்ன நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் மடிந்தன.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
நாகை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் சுமார் 160-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர். அரசுவழங்கிய நிவாரணம் அனைவருக்கும் சமமாக சேரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காசிமேடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:
இதுகுறித்து இப்பகுதியில் வசித்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சுனாமியில் உடமைகளையும் உயிரையும் இழந்தன. உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களுக்கு சமமான உதவி கிடைக்கவில்லை. தொண்டு நிறுவனங்கள், தங்களால் முடிந்தவற்றை செய்தன. அரசு அறிவித்தபடி அனைவருக்கும் வீடு வழங்கவில்லை. இதனால் புயல், கனமழை, அசுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அகில இந்திய மீனவர்சங்க தேசிய செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி கூறியதாவது: பல தொண்டு நிறுவனங்கள் போதிய நிதி கிடைக்கவில்லை என நிவாரண திட்டங்களை பாதியில் நிறுத்தின. 450 சதுரஅடி பரப்பளவில் வீடுகள் கட்டுவதற்கு பதிலாக, 250 சதுரஅடி பரப்பளவில் கடும் இடநெருக்கடி கொண்ட வீடுகளை அரசு வழங்கியது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மறுவாழ்வு திட்டத்துக்கு போதிய கட்டமைப்புகள் இல்லாததால், அதை மாணவர்கள் புறக்கணித்தனர். மீனவர்களுக்கென கட்டப்பட்ட குடியிருப்புகளில் செல்வாக்கு பெற்ற கட்சிக்காரர்களுக்கு விதிமீறி வீடுகள் ஒதுக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டு சுனாமி தினத்தன்றும் அரசியல் கட்சிகள், அமைச்சர்கள் கடலில்பால் ஊற்றி அஞ்சலி செத்துவதில் காட்டும் ஆர்வத்தை, மீனவர் நல திட்டங்களில் காட்ட வேண்டும். மீனவர் பகுதிகளில் படிப்பகங்கள், சுகாதாரமான மீன் விற்பனை கடைகள்,உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றை உருவாக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து தென்னிந்திய மீனவர் நலச்சங்க தலைவர் கு.பாரதி கூறியதாவது:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். சுனாமி குறித்த விழிப்புணர்வுக்கு இது வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தி வீடுகள் கட்டித் தரவேண்டும். சுனாமியின்போது பலகோடி ரூபாய் மதிப்பிலான உடைமைகள் பறிபோயின. ஒரு விசைப்படகை வாங்க வலையுடன் சேர்த்து ரூ.5 கோடி செலவாகும். உடைமைகள் இழப்பை இதுவரை அரசு வழங்கவில்லை. சுனாமி ஏற்பட்டால் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாக்க வசதி இல்லை. அதை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago