மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்கும் புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி பெருமிதம்

By செ.ஞானபிரகாஷ்

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாநிலம் புதுச்சேரி என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

இந்நிலையில் மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வழிபட்டார்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், ''புதுச்சேரி மாநிலம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாநிலம். இங்கு கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அனைவரும் மகிழ்வுடன் ஒன்றாக வாழ்கின்றனர். இயேசு பிறந்த இந்த நன்னாளில் அனைவரும் சந்தோஷத்துடன் இருக்க வாழ்த்துகள்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்