தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6-ல் கூடுகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளு நர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.

இந்த ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டம், கடந்த ஜனவரி 2-ம் தேதி ஆளு நர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது5 நாட்கள் விவாதம் நடந்தது. அதன்பின், பட்ஜெட் கூட்டத் தொடர், பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கியது. அன்று 2019-20 நிதியாண்டுக்கான பட் ஜெட்டை துணை முதல்வர் தாக்கல் செய்தார். அந்த கூட்டத் தொடர் பிப். 14-ம் தேதி வரை நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் நடக்க விருந்ததால், துறைவாரியான மானியக் கோரிக்கை விவா தங்கள் தள்ளிவைக்கப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் பேரவை கூட்டத் தொடர் நடந்தது. 17 நாட் கள் நடந்த இந்த கூட்டத் தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப் பட்டன. அத்துடன், 15-வது சட்டப்பேரவையின் 7-வது கூட்டத் தொடரை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் முடித்து வைத்து அறிவித்தார்.

இந்நிலையில், சட்டப் பேரவையின் 8- வது கூட்டத் தொடர், வரும் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது.

இதுகுறித்து சட்டப்பேர வைச் செயலர் கே.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செய லகத்தில் உள்ள சட்டப் பேரவை அரங்கில் ஆளுநர் கூட்டியிருக்கிறார். அன்று அவையில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

பேரவையில் ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் ப.தனபால் வாசிப் பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவுபெறும். அன்று பிற்பகலில் பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய் வுக்குழு கூடி, பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். பெரும் பாலும், ஜனவரி 10-ம் தேதி வரை 5 நாட்கள் கூட்டத் தொடர் நடத் தப்படலாம் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. குடியுரிமைச் சட்டம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரச் சினைகளை பேரவையில் எதிர்க்கட்சிகள் கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE