பிரச்சாரத்தின்போது வேட்பாளரின் கணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு கிராமத்தில் பிரச்சாரத்தின் போது வேட்பாளரின் கணவர் மயங்கிவிழந்து உயிரிழந்ததால் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதனால் மற்ற வேட்பாளர்கள் யாரும் இன்று கிராமத்தில் பிரச்சாரம் செய்யவில்லை.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியத்திற்குட்பட்ட பழைய வத்தலகுண்டு கிராம முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன்(61). இந்தமுறை ஊராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் முருகேசனின் மனைவி யசோதை ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை தனது மனைவியுடன் முருகேசன் தனது உறவினர்கள், ஆதரவாளர்களுடன் பழைய வத்தலகுண்டு கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது முருகேசனுக்கு திடீர்என நெஞ்சுவலி ஏற்பட்டதில் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். பிரச்சாரத்தின்போது வேட்பாளரின் கணவர் முருகேசன் திடீர் என மயங்கிவிழந்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் இன்று முழுவதும் இந்த கிராமத்தில் மற்ற வேட்பாளர்கள் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்