கடலூர் மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள்

By செய்திப்பிரிவு

கடலூர் தாழங்குடா மீனவர் வலையில் மர்மப்பொருள் ஒன்று சிக்கியது. இது பிரமோஸ் ஏவுகணையின் பாகங்களா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் தாழங்குடா பகுதி மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, அவர்களின் வலையில் பந்து போன்ற மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது. அது என்ன பொருள் என்று தெரியாமல் கரைக்கு கொண்டு வந்து, படகு நிறுத்தும் பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து நேற்று அப் பகுதி மீனவர்கள் சிலர், கடலூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் தகவல் தந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கடலூர் டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பந்து போல உள்ள பொருளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பந்துபோல உள்ள அந்த மர்மப் பொருளில் பிரமோஸ் என்றும் பிஐஎப்பி-04 என்று எழுதப்பட்டுள்ளது. இதனால், அது பிரமோஸ் ஏவுகணையின் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்