சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள்: மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மத்தியஅரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும்படி மாணவர்களை சில அமைப்புகள் தூண்டுவதாக வந்த புகாரையடுத்து, அவர்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகளை பதிவிடும் நபர்கள், பகிரும் நபர்கள், பதிவு செய்யப்படும் கருத்துகள் போன்றவற்றையும் கண்காணிக்கின்றனர்.

மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கூறும்போது, ‘பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக வலைதளங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE