குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை பல்கலை. மாணவர் போராட்டம் நீடிப்பு: கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான சென்னை பல்கலைக்கழக மாண வர்கள் தொடர் போராட்டத்துக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று தொடர்ந்தனர். இதனால் பல்கலைக் கழக வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. மேலும், அலுவலர்கள் தவிர மாணவர்கள் உட்பட யாரும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரி விக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகம் வந்தார். ஆனால், அவர் உள்ளே செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, நுழைவுவாயில் பகுதிக்கு போராட்டக்குழுவினர் வந்தனர். அவர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் தன் ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் கட்சிக்காரனாக இங்கு வரவில்லை. என் ஆதரவை தெரிவிக்கவே வந்தேன். இங்கு படிக்கும் வெளிமாநில மாணவர்கள் தரமணியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். திடீரென விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு உடனே விடுதியையும் மூடிவிட்டனர். இத னால் நூற்றுக்கணக்கான மாணவர் கள் தங்க முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. அரசே தன் சொந்த மாணவர்களை அகதிகளாக மாற்று கிறது. சட்டங்கள் மக்களுக்கு பயன்படாது எனில் அவை மாற்றப்பட வேண்டும். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பல்கலைக்கழக மாணவர்களைப் போல, சென்னை பச்சையப்பா மாநில கல்லூரி மற் றும் ராயப்பேட்டை புதுக்கல்லூரி களிலும் மாணவர்களும், போராட் டத்தை தொடர்ந்தனர்.

திமுக பேரணியில் ம.நீ.ம பங்கேற்பு

பின்னர் அவரிடம், ‘திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணியில் பங்கேற்பீர்களா’ என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘‘மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிப்பாகப் பேரணியில் பங்கேற்கும். ஆனால், காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் என்னால் பங்கேற்க முடியாது. என் சார்பாக கட்சியினர் பங்கேற்பார்கள்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE