குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் எதிரொலி; தமிழகத்தில் கண்காணிப்பு பணி தீவிரம்: டிஜிபி தலைமையில் ஆலோசனை

By இ-பேப்பர்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்துநாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், அசாம், உத்தரப்பிரதேசம் உட்பட பல வடமாநிலங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களும் அதைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், உத்தரப்பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆங்காங்கே சில கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐஐடி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்பினர் போராட்டங்களை நடத்துவதற்கு தொடர்ந்து முயற்சிசெய்து வருகின்றன. நுண்ணறிவு பிரிவு போலீஸார் மூலம் இதை அறிந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், தற்போது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு போராட்டங்களில் ஈடுபட வைக்க முயற்சி நடப்பதாக நுண்ணறிவு போலீஸார் அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால், இந்த விஷயத்தில் அதிக கவனம்செலுத்தும்படி அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உயர் அதிகாரிகள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட சில மாணவர் அமைப்பினர் மட்டும்தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடந்துள்ளது. தமிழக சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்து ஏடிஜிபி ஜெயந்த்முரளி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்