விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனு மீதான பரிசீலனை 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இன்று காலை தொடங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 27.12.19 அன்று ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கும், 103 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 194 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 1554 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், 1028 வாக்குச்சாவடி மையங்களில் நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், 2,71,035 ஆண் வாக்காளர்களும், 2,83,621 பெண் வாக்காளர்களும், 63 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,54,719 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக 30.12.19 அன்று அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் சாத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளுக்கும், 97 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 256 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும் 1818 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் 1114 வாக்குச்சாவடி மையங்களில் நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில், 2,39,290 ஆண் வாக்காளர்களும், 2,49,542 பெண் வாக்காளர்களும், 31 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4,88,863 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இத்தேர்தலில் 20 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 200 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 450 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 3372 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் எனமொத்தம் 4042 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக நேரடித் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில் வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனு மீதான பரிசீலனை 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை ஏற்கப்பட்ட வேட்புமனுக்களின் விவரங்கள் வெளியாகும். இதனைத் தொடர்ந்து வரும் 19-ம் தேதி வரை மனுக்களை திரும்பப்பெற அவகாசம் அளிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago