தண்ணீரில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு : விருப்ப நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கினார்

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட நாளைய விஞ்ஞானி நிகழ்ச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையால் பாராட்டு பெற்ற தண்ணீரில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்த பென்னாத்தூர் அரசுப் பள்ளி மாணவரை, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் பாராட்டி ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட வரு வாய் அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

தேசிய உழவர்கள் கூட்ட மைப்பின் மாவட்டத் தலைவர் சதானந்தம் காலி சாராய பாக் கெட்டுகளுடன் மனு அளிக்க வந்தார். அவர் அளித்த மனுவில், ‘‘மேல்அரசம்பட்டு கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து சாராயம் விற்கப்படுகிறது. மேல் அரசம்பட்டில் உள்ள முருகன் கோயில், பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் தடையில்லாமல் சாராயம் விற்கிறார்கள். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 'இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் சமீபத்தில் நடந்த நாளைய விஞ்ஞானி நிகழ்ச்சியில் வேலூர் அடுத்த பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேவேந்திரன் கண்டு பிடித்த தண்ணீரில் இயங்கும் இரு சக்கர வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாண வரின் இந்தக் கண்டுபிடிப்பை விஐடியுடன் இணைந்து அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு கொண்டு செல்வதுடன் காப்புரிமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை அறிவித்தார்.

பலராலும் பாராட்டு பெற்ற பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேவேந்திரனை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நேரில் அழைத்து நேற்று பாராட்டியதுடன் தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாநாதன், மாணவரின் தந்தை தசரதன் ஆகியோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் உள்ள தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

சோளிங்கர் நகர மக்கள் சார்பில் அளித்த மனுவில், ‘‘சோளிங்கர் பிரதான சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை சோளிங்கர்- வாலாஜா சாலையில் இடமாற்றம் செய்வதாகக் கூறப் படுகிறது. இடமாற்றம் செய்யப்படும் சாலை வழியாக ஏராளமானவர்கள் கோயிலுக்கு செல்வார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி புதிய இடத்தில் மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டாம்’’ என தெரிவித்துள்ளனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘‘தண்டலம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட தண்டலம் ஏரியால் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறு கின்றன. இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மாசுபட்டுள்ளது. எனவே, ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்