விவேகானந்தர் மண்டப பொன்விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 25-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் 1892-ம்ஆண்டு டிசம்பர் 25-ம் தேதிசுவாமி விவேகானந்தர் தியானம்செய்த இடத்தில், விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடேஏற்பாட்டில் கட்டப்பட்ட விவேகானந்தர் மண்டபம், 1970 செப்டம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டது.
விவேகானந்தர் மண்டபத்தின் பொன்விழா கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இவ்விழாவில் பங்கேற்க டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். இதையேற்று, விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறும் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago