இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் பைக்கில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தங்கள் பயணப் பாதையில் அவர்கள் இன்று (திங்கள்கிழமை) மதுரை மாவட்டம் வந்தடைந்தனர்.
ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் என்பதே இந்த இளைஞர்களின் பயண நோக்கம்.
அதன்படி, மதுரை - திருப்பரங்குன்றம் சுற்றுச்சாலையில் அவர்கள் இன்று காலைவிழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவருமே கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள். தலைக்கவசம் அணிவதன் பாதுகாப்பை வலியுறுத்தி திருச்சூர் முதல் தனுஷ்கோடி வரை பைக்கில் பயணம் செய்வதாகத் தெரிவித்தனர்.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி. ஆலுவா, போன்ற பகுதிகளிலிருந்து அவர்கள் 3 பைக்குகளில் கடந்த 14-ம் தேதி புறப்பட்டுள்ளனர். திருச்சூரிலிருந்து புறப்பட்டு மூணாறு, போடி ,தேனி ,மதுரை வழியாக தனுஷ்கோடிக்கு செல்கின்றனர். பின்னர் மீண்டும் தனுஷ்கோடியில் இருந்து புறப்பட்டு கோவை வழியாக திருச்சூர் செல்கின்றனர்.
ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் உயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்வதே தங்களது பயண நோக்கம் என்று கூறும் இளைஞர்கள். எங்களது அதிகபட்ச வேகமே 60 கிலோமீட்டர் தான் என்று கூறி ஆச்சரியப்பட வைக்கின்றனர்.
உயிர் பாதுகாப்பின் அவசியத்தை இளைஞர்கள் சாலை விதிகளை மதித்து 'பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago