தெற்கு, கிழக்கு ரயில்வே பகுதிகளில் சில இடங்களில் போராட்டம் நடந்து வருவதால், தமிழகத்தில் இருந்து ஹவுரா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய 8 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தெற்கு, கிழக்கு ரயில்வே பகுதிகளில் மக்கள் சிலர் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடப்பதால், பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டுசில விரைவு ரயில்களின் சேவையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை - ஹவுரா (12840), மங்களூர் சென்ட்ரல் - சந்திரகாச்சி விவேக் விரைவு ரயில் (22852), புதுச்சேரி - ஹவுரா(06010) ரயில்களின் நேற்று முன்தின சேவைகளும் சென்னை - ஹவுரா கோரமண்டல் (12842), புரி - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22859), சென்னை - புரிவிரைவு ரயில்கள் மற்றும் சென்னைசென்ட்ரல் - ஹவுரா (12840) மெயில் ரயில்களின் நேற்றைய சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் கன்னியாகுமரி - ஹவுரா (1266), திருவனந்தபுரம் - சால்மார் (22641) உள்ளிட்ட சிலவிரைவு ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டன. சென்னை - புரி வாராந்திர விரைவு ரயில் (22860) இன்றைய சேவை (16-ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago