மாணவி பாத்திமா உட்பட ஐஐடியில் நடந்த தற்கொலைகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகள் தள்ளுபடி: மாணவர், ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க உத்தரவு

By செய்திப்பிரிவு

மாணவி பாத்திமா லத்தீப் தற் கொலை உட்பட சென்னை ஐஐடி யில் நடந்துள்ள தற்கொலைகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாண வர்கள், ஆசிரியர்களுக்கு உள வியல் ஆலோசனை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீப் (20) கடந்த நவம்பர் 8-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ‘பாத்திமா மரணத்தில் சந்தேகம் உள்ளது. தவிர, இதுபோல மேலும் பலர் இறந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரி இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் அஸ்வத்தாமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கேரள கட்சி தலைவர் வழக்கு

‘சென்னை ஐஐடியில் கடந்த 2006 முதல் தற்போது வரை 14 மாணவர்கள் மர்மமான முறை யில் தற்கொலை செய்து கொண் டுள்ளதால், இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண் டும்’ என்று, கேரள லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவரான கோழிக்கோடு சலீம் மடவூர் என்ப வரும் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அஸ்வத்தாமன் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சேஷசாயி அமர் வும், சலீம் மடவூர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வும் விசாரித்தன.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் டி.ராஜகோபால் ஆஜராகி, ‘‘சென்னை ஐஐடியில் சாதி, மத ரீதியாகவும், ஆங்கிலப் புலமை பெற்றவர்களாலும், பேரா சிரியர்களாலும் மாணவ, மாணவி கள் துன்புறுத்தப்படுவதாக குற்றச் சாட்டு உள்ளது. பாத்திமா உள் ளிட்ட அனைவருமே மர்மமான முறையில் இறந்துள்ளதால், இந்த வழக்குகளை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்’’ என்று வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு சிறப்பு பிளீடர் ஏ.என்.தம்பி துரை ஆஜராகி வாதிடும்போது, ‘‘பாத்திமா மரணம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் விசாரித்து வருகிறார். மாணவியின் செல்போன் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்படும் நபர் கள் குறித்தும் விசாரணை நடக் கிறது. விசாரணை இறுதிக்கட் டத்தை எட்டியுள்ளது. ஐஐடி வளா கத்தில் கடந்த 2008 முதல் இது வரை மனஅழுத்தம் காரணமாக 16 பேர் தற்கொலை செய்துள்ளனர். நன்றாக படிக்க முடியவில்லை என்பதாலும், வேறு சில காரணங் களாலும் தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக மாநில போலீஸார் சரியான கோணத்தில்தான் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, இந்த 2 வழக்கு களிலும் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

பெற்றோர் வேதனை

இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

நன்கு படிக்கும் மாணவி திடீ ரென மரணம் அடையும்போது, அந்த இழப்பை, மன வேதனையை எந்த பெற்றோராலும் தாங்கிக் கொள்ள முடியாது. மன அழுத்தம் காரணமாகவே மாண வர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறு வனங்களில் இதுபோன்ற தற் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக மாணவர்களுக்கும், ஆசி ரியர்களுக்கும் உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கி, விலை மதிக்க முடியாத உயிர்களை காக்க வேண்டும்.

மேலும், சரியான காரணங்கள் இன்றி சிபிஐ விசாரணைக்கு உத் தரவிட முடியாது. அதற்கு போதிய முகாந்திரம் இருப்பதற்கான ஆவணங்களும் தாக்கல் செய்யப் படவில்லை.

அனுதாபம், உணர்வுகளை மட்டுமே கருதி இந்த விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடி யாது என்பதால், இதை தள்ளுபடி செய்கிறோம்.

அதேநேரம், மகளை பறி கொடுத்து தவிக்கும் பெற்றோரின் மனநிலையை அறிந்து, இந்த வழக்கின் புலன் விசாரணை குறித்த நிலை அறிக்கையை போலீ ஸார் வரும் ஜனவரி 21-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்