தமிழகத்தில் இருந்து சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக மேலும் 2 தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சபரிமலை யாத்திரை மேற் கொள்ளும் தமிழக பக்தர்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் தகவல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் தகவல் மையம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஜனவரி 31-ம் தேதி வரை கட்டண மில்லா தொலைபேசி சேவையாக 1800-425-1757 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பக்தர்கள் பயன்பெறலாம்.
இதுதவிர, தேனி மாவட்டம் வீர பாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகில், தென்காசி மாவட்டம் குற்றாலநாத சுவாமி கோயில் சார்பில் புளியரையில் உள்ள நெற்களஞ்சியம் மற்றும் கன்னியா குமரி எல்லையான களியக் காவிளை ஆகிய இடங்களிலும் தகவல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து, கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோயில், பொள்ளாச்சி - பாலக் காடு நெடுஞ்சாலையில் ராமநாத புரம் கிராமத்தில் உள்ள பத்ர காளியம்மன் கோயில் மண்டபம் ஆகிய இடங்களில் புதிதாக தக வல் மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன.
இந்த மையங்களில் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர், கழிப்பறை, பக்தர் கள் ஓய்வெடுக்கும் வகையில் இருப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், ஐயப்ப பக்தர்களுக்கான வழிகாட்டி விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago