உடந்தையாக இருந்தவர்கள் யார்?- தவமணி வாக்குமூலத்தால் போலீஸார் கலக்கம்

By அ.சாதிக் பாட்சா

போலீஸ் பிடியில் இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் தப்பிய டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வழக் கின் முக்கிய குற்றவாளி தவமணி, 9 மாதங்களுக்கு பிறகு போலீ ஸிடம் சிக்கியுள்ளார். தனக்கு உடந்தையாக இருந்த போலீ ஸார், சிறைத் துறையினர் பற்றிய முக்கிய தகவல்களை விசாரணை யின்போது அவர் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கடலூர் மாவட்டம் பத்திரக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தவமணி (33). டிஎன்பிஎஸ்சி வினாத் தாள் வெளியான வழக்கில் முக்கிய குற்றவாளி.

ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தப்ப முயன்றதால் திருச்சி சிறைக்கு மாற்றப் பட்டிருந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த திருச்சி சிறையில் இருந்து அவரை போலீஸார் கடந்த நவம்பரில் அழைத்துச் சென்றனர். திரும்பும் வழியில் கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே ரயிலில் இருந்து அவர் தப்பித்துவிட்டதாக போலீஸார் கூறினர். இதையடுத்து, ஒரு எஸ்ஐ உட்பட 5 போலீஸார், 4 சிறைக் காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அருள் அமரன் தலை மையிலான தனிப்படை யினர் பல மாநிலங்களுக்கும் சென்று அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீஸாரிடம் தவமணி சிக்கினார். அவ ரிடம் திருச்சி காவல் துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் தெரிய வந்தது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை அருகே தங்கியிருந்தார்

போலீஸ் பிடியில் இருந்து தப்பிய ஓரிரு வாரங்கள் வரை தமிழகத்துக்கு வெளியிலேயே தவமணி சுற்றியுள்ளார். பிறகு சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் மனைவியுடன் வீடு பிடித்து தங்கி யுள்ளார். அங்குள்ள தொழிற் சாலைகளுக்கு ஒப்பந்த தொழி லாளர்களை அனுப்பும் வேலையை செய்துவந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தவமணி யுடன் ஏற்பட்ட மோதலில், அவரது மனைவி தீக்குளித்துவிட்டார். காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மனைவியை தவமணி உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இத்தக வல் அறிந்து சென்ற தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தான் தப்புவதற்கு உதவியாக இருந்த போலீஸார், சிறைத் துறை யினர், ரவுடி கும்பல் குறித்து முக் கியத் தகவல்களை தவமணி தெரிவித்துள்ளார் என கூறப்படு கிறது. அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தவமணியை திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர். இன்னும் விசாரணை நடத்தவேண்டி இருப்பதால் சில நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இத னால், அவருடன் ரகசிய தொடர் பில் இருந்த போலீஸார், சிறைத் துறையினர் கலக்கத்தில் உள் ளனர்.

முக்கிய தகவல்

இதற்கிடையே குல்பர்காவில் ரயிலில் இருந்து தப்பிச் சென்ற வழக்கின் விசாரணைக்காக தவமணியை கர்நாடக போலீ ஸார் காவலில் எடுக்க திட்டமிட் டுள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது. அவர் ரயிலில் இருந்து தப்பி யது தொடர்பாக கர்நாடக மாநிலம் குல்பர்கா காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அவர் மீதான வழக்கின் விசாரணைக்காகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற் காகவும் தவமணியை காவலில் எடுத்துச் செல்ல கர்நாடக போலீஸார் தமிழக போலீஸாருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக திருச்சி போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்