கலைத்துறையில் இருந்து அதிமுக அரசு உருவானதால் திரைத் துறை மீது எப்போதும் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறோம். மேலும் திரைப்பட விழாவுக்கு ரூ.1 கோடி நிதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இந்தோ சினி அப்ரிஷி யேஷன் ஃபவுண்டேஷன்ஸ் சார்பில் 17-வது சென்னை சர்வ தேச திரைப்பட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடை பெற்றது. அதில் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்ற தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்தார். திரைத் துறையைச் சேர்ந்த இயக்கு நர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார்,ஆர்.பார்த்திபன், மனோபாலா, பா.இரஞ்சித், நடிகைகள் சச்சு, ரோகிணி, லிசி மற்றும் கொரியா, தைவான், ஆஸ்திரேலியா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா ரூ.10 கோடி வழங்கி இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சென் னையில் நடத்தி காட்டினார்.
அந்தப் பெருமை தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக அரசுக்கு உண்டு. மற்ற மாநிலங்களில் அரசு வேறு, கலைத் துறை வேறாக இருக்கும். இந்த அரசு, கலைத் துறையைச் சார்ந்த அரசு. கலைத்துறையில் இருந்து உருவாகிய அரசு.
சென்னை சர்வதேச திரைப் பட விழாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில் ஜெயலலிதா ரூ.50 லட்சம் என உயர்த்தினார். முதல்வர் பழனிசாமி, இந்த ஆண்டு ரூ.75 லட்சமாக உயர்த்தியுள்ளார். இதை அடுத்த ஆண்டு ரூ.1 கோடி யாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து அரசு பரிசீலிக் கும்.
இந்த விழாவில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த மேடை பெருமை பெறுகிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
12 தமிழ்ப் படங்கள்
இம்மாதம் 19 வரை நடைபெற உள்ள இந்த விழாவில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சிறப்பு திரையிடல் வரிசையில் 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago