மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் சார்பில் போக்குவரத்துத் துறையில் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2018-19-ல் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, மதுரை மாநகர் பேருந்துகளில் பயணிகள், தாங்கள் இறங்கும் இடங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக, நிறுத்தங் களின் பெயர்களை ஒலிபரப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
அதன்படி மதுரை மாநகர் பேருந்துகளில் சோதனை அடிப்படையில் ஜிபிஎஸ் கருவி மூலம் அடுத்தடுத்த நிறுத்தங்களை முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள், அடுத்த நிறுத்தத்தை முன் கூட்டியே அறிந்து கொண்டு எளிதில் இறங் கிட வசதியாக உள்ளது. இது பொதுமக் களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வசதியை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, திருவொற்றியூர் - பூவிருந்தவல்லி வழித்தடம் 101, கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம் - கேளம்பாக்கம் வழித்தடம் 570, அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி வழித்தடம் 25ஜி ஆகிய வழித்தடங்களில் இயங்கும் 75 பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நிறுத்தத்தில் இருந்து அடுத்த நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டருக்கு முன்னதாக தமிழில் அறிவிப்பு செய்யப்படும். பயணிகள் வரவேற்பைப் பொறுத்து படிப்படியாக சென்னையில் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago