டிசம்பர் 27 மற்றும் 30-ல் வாக்குப் பதிவு; 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்கள் விவரம் வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கை 

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சென்னை உள் ளிட்ட 10 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு டிச.27 மற்றும் 30 ஆகிய தினங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இதற்கான அறி விக்கை நேற்று வெளியிடப்பட்டு, வேட்புமனுத் தாக்கலும் தொடங் கியுள்ளது. அதில், 2 கட்டங்களாக எந் தெந்த ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறும் என்ற பட்டி யலை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 27-ம் தேதி

அதன்படி, டிச.27-ம் தேதி, அரியலூர் மாவட்டத்தில் அரிய லூர், செந்துறை, திருமானூர் ஒன் றியங்கள், கோவை - ஆனை மலை, கிணத்துக்கடவு, மதுக் கரை, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள், கடலூர் - கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப் பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஒன்றி யங்கள், தருமபுரி - தருமபுரி, அரூர், கடத்தூர், நிலாம்பள்ளி, பாப்பிரெட்டிபட்டி ஒன்றியங்கள், திண்டுக்கல் - ஆத்தூர், பல்ல குண்டு, திண்டுக்கல், நத்தம், நிலக் கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி ஒன்றியங்கள், ஈரோடு - ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பி யூர், தாளவாடி, தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியங்கள்.

அதேபோல், கன்னியாகுமரி - குருந்தங்கோடு, மேல்புறம், ராஜாக்கமங்கலம், திருவட்டாறு, தக்கலை ஒன்றியங்கள், கரூர் - அரவக்குறிச்சி, கே.பரமத்தி, கரூர், தாந்தோணி ஒன்றியங்கள், கிருஷ்ணகிரி - ஒசூர், காவேரிப் பட்டினம், மத்தூர், தளி, ஊத்தங்கரை ஒன்றியங்கள், மதுரை - அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், வாடிப்பட்டி ஒன்றியங்கள், நாகை - கீழ்வேளூர், கொள்ளிடம், நாகை, செம்பனார்கோவில், சீர் காழி, திருமருகல் ஒன்றியங்கள், நாமக்கல் - கபிலர்மலை, கொல்லி மலை, மல்லசமுத்திரம், நாமா திரிப்பேட்டை, பள்ளிப்பாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண் ணாந்தூர் ஒன்றியங்கள், பெரம் பலூர் - பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்கள்.

மேலும், புதுக்கோட்டை - அன்னவாசல், கந்தர்வக்கோட்டை, குன்னந்தார்கோவில், புதுக் கோட்டை, விராலிமலை ஒன்றியங் கள், ராமநாதபுரம் - மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புலாணி, திருவாடாணை ஒன்றியங்கள், சேலம் - எடப்பாடி, கடயம்பட்டி, கொளத்தூர், கொங் கநாபுரம், மகுடன்சாவடி, மேச்சேரி, நங்கவல்லி, ஓமலூர், சங்கரி, தாராமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஒன்றியங்கள், சிவகங்கை - இளையாங்குடி, காளையார் கோயில், மானாமதுரை, சிவ கங்கை, திருப்புவனம் ஒன்றியங்கள், தஞ்சை - அம்மாப்பேட்டை, புதலூர், கும்பகோணம், பாப நாசம், திருப்பானந்தை, திருவையாறு, திருவிடைமருதூர் ஒன்றியங் கள், நீலகிரி - குன்னூர், கோத்த கிரி ஒன்றியங்கள், தேனி - ஆண் டிப்பட்டி, கே.மயிலாடும்பாறை ஒன்றியங்கள், தி.மலை - அனக்கா வூர், செய்யாறு, கீழ்பெண்ணாத் தூர், பேர்ணமல்லூர், தண்டராம் பட்டு, தெள்ளாறு, துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, வெம்பாக்கம் ஒன்றியங்கள், தூத்துக்குடி - ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம், வைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, உடன்குடி ஆகிய ஒன்றியங்கள்.

திருச்சி - அந்தநல்லூர், மணப் பாறை, மணிகண்டம், மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஒன் றியங்கள், திருப்பூர் - தாராபுரம், காங்கேயம், முலனூர், பல்லடம், திருப்பூர் ஊத்துக்குளி, வெள்ள கோயில் ஒன்றியங்கள், திருவள் ளூர் - கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, திருத் தணி, திருவள்ளூர் ஒன்றியங்கள், திருவாரூர் - கோட்டூர், மன்னார் குடி, முத்துப்பேட்டை, திருத் துறைப்பூண்டி, திருவாரூர் ஒன்றி யங்கள், விருதுநகர் - ராஜபாளை யம், சிவகாசி, வில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஒன்றியங்களில் டிசம்பர் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டிசம்பர் 30-ம் தேதி

இரண்டாம் கட்டமாக டிச.30-ம் தேதி, அரியலூர் - ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், டி.பாலூர் ஒன்றி யங்கள், கோவை - அன்னூர், காரமடை, பெரியநாயக்கன்பாளை யம், சர்கார்சாமகுளம், சுல்தான் பேட்டை, சூலூர், தொண்டாமுத் தூர் ஒன்றியங்கள், கடலூர் - அன் னகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரபாளையம், குமராட்சி, நல்லூர், முஷ்ணம், விருத்தாச்சலம் ஒன் றியங்கள், தருமபுரி - ஏரியூர், கரிமங்கலம், மொரப்பூர், பாலக் கோடு, பெண்ணாகரம் ஒன்றியங் கள், திண்டுக்கல் - குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் ஒன்றியங்கள், ஈரோடு - அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானிசாகர், சென்னி மலை, பெருந்துறை, சத்தியமங் கலம் ஒன்றியங்கள், கன்னியாகுமரி - அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், முஞ் சிறை, தோவாளை ஒன்றியங்கள், கரூர் - கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகமலை ஒன்றி யங்கள், கிருஷ்ணகிரி - பர்கூர், கேளமங்கலம், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனபள்ளி.

அதேபோல், மதுரை - செல்லம் பட்டி, கள்ளிக்குடி, சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஒன்றியங்கள், நாகை - கீளையூர், குத்தாலம், மயிலாடுதுறை, தலை ஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங் கள், நாமக்கல் - எலச்சிபாளையம், எருமபட்டி, மோகனூர், நாமக்கல், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்த மங்கலம் ஒன்றியங்கள், பெரம் பலூர் - ஆலத்தூர், வேப்பந் தட்டை ஒன்றியங்கள், புதுக் கோட்டை - அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோயில், மணமேல் குடி, பொன்னமராவதி, திருமயம், திருவரன்குளம் ஒன்றியங்கள், ராமநாதபுரம் - போகலூர், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நயினார் கோயில், பரமக்குடி ஒன்றியங் கள், சேலம் - ஆத்தூர், அயோத் தியாபட்டினம், கங்கவல்லி, பன மரத்துப்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஒன்றியங்கள், சிவ கங்கை - தேவகோட்டை, கல்லல், கன்னன்குடி, எஸ்.புதூர், சாக் கோட்டை, சிங்கம்புணரி, திருப்பத் தூர் ஒன்றியங்கள்.

மேலும், தஞ்சை - மதுக்கூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சை, திருவோணம் ஒன்றியங் கள், நீலகிரி - கூடலூர், உதகை ஒன்றியங்கள், தேனி - போடிநாயக் கனூர், சின்னமனூர், கம்பம், பெரி யகுளம், தேனி, உத்தமபாளையம் ஒன்றியங்கள், திருவண்ணாமலை - ஆரணி, செங்கம், சேத்துப் பட்டு, ஜவ்வாதுமலை, கலசபாக்கம், போளூர், புதுப்பாளையம், வந்தவாசி, மேற்கு ஆரணி ஒன்றி யங்கள், தூத்துக்குடி - கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், புதூர், விளாத்திகுளம் ஒன்றியங்கள், திருச்சி - லால்குடி, மண்ணச் சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத் தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியாபுரம் ஒன்றி யங்கள், திருப்பூர் - அவிநாசி, குடி மங்கலம், குண்டாடம், மடத்துக் குளம், பொங்கலூர், உடுமலைப் பேட்டை ஒன்றியங்கள், திருவள் ளூர் - எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லி வாக்கம் ஒன்றியங்கள், திருவாரூர் - குடவாசல், கொரடாச்சேரி, நன் னிலம், நீடாமங்கலம், வலங்கை மான் ஒன்றியங்கள், விருதுநகர் - அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், திருச்சுழி, விருதுநகர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-ம் கட்டமாக டிச.30-ம் தேதி தேர்தல் நடைபெறும். இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்