இஸ்ரோவின் ‘ரிசாட்-2பிஆர்1’ உட்பட உலக நாடுகளின் 10 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது 

By செய்திப்பிரிவு

விவசாயம், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் இஸ்ரோவின் ‘ரிசாட்-2பிஆர்1’ உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 10 செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் நாளை மாலை விண்ணில் செலுத்தப்படுகின்றன.

விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக ‘ரிசாட்-2பிஆர்1’ செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் நாளை (டிச.11) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்-டவுன் இன்று தொடங்குகிறது.

இந்த செயற்கைக் கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் வர்த்தக ரீதியில் விண்ணில் ஏவப்பட உள்ளன.

வானிலை தொடர்பான ரேடார் படங்களை வழங்கும் ‘ரிசாட்-2பிஆர்1’ புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் 628 கிலோ எடை கொண்டது. இது 576 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. செயற்கைக் கோள் அந்த இலக்கை அடைய 21 நிமிடங்கள், 19 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்