எஸ். ஸ்ரீனிவாசகன்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலைத் தாக்கல் செய்ய மாநிலத் தேர்தல் ஆணையம் முதல் முறையாக உத்தரவிட்டுள்ளது.
மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடுவோர் சொத்துப்பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். அடுத்தடுத்த தேர்தல் களில் இவர்கள் தாக்கல் செய்யும் சொத்து விவரங்களை அதிகாரிகள், வருமானவரித் துறையினர் கண் காணிப்பர். சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யும் நடைமுறை தற் போது உள்ளாட்சித் தேர்தலிலும் முதல்முறையாக அமலுக்கு வந் துள்ளது.
வேட்பு மனுவுடன் சொத்து மற்றும் வழக்கு விவரங்களைத் தெரிவிக்கும் 3-ஏ என்ற உறுதி மொழி படிவமும் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகள், தண்டனை விவரம், மற்றும் அசையும், அசையா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
தனக்கும், குடும்பத்தினர் பெயரிலும் இருக்கும் சொத்துகள், விவசாய நிலங்கள், இதர சொத்து கள், வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்கள், முதலீடுகள், பண இருப்பு உள்ளிட்ட விவரங்களை முழுமை யாகத் தெரிவிக்க வேண்டும்.
கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டு மின்றி கிராமப் பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு போட்டியிடுவோரும் சொத்து விவர பட்டியலை நோட் டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியா னோர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட பத்திரங் களை வேட்புமனுவுடன் இணைக்க வேண்டும்.
கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடு வோர் சுய உறுதிமொழியுடன் மனுக்களை தாக்கல் செய்யலாம். இதுகுறித்து மதுரை கிழக்கு ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலு வலர் ஒருவர் கூறியதாவது: வேட் பாளர் அளிக்கும் சொத்துப் பட்டி யல் விவரங்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
வேட்பு மனுக் கள் பரிசீலனையின்போது பட்டியலில் காட்டப்படாத சொத்துகள் குறித்து உரிய ஆவணங்களுடன், ஆதாரப்பூர்வமாக புகார் அளித் தால் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் மனுவை ஏற்பது குறித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த திடீர் உத்தரவால் உள்ளாட் சித் தேர்தலில் போட்டியிட ஆர்வ மாக இருந்த அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago