நேபாளத்தில் நடைபெற்று வருகின்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்ற வீராங்கனை அனுராதாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையிலும், இந்தியத் திருநாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தும்
வகையிலும் புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அனுராதா அவர்கள் நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ பிரிவு பளு
தூக்கும் போட்டியில் தங்கம் வென்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வீராங்கனை அனுராதா, ஏற்கெனவே காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அவரது திறமைகள் உலக அரங்கில் மென்மேலும் பெருகி, பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும்’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago