உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை மற்றும் 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீத முள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிச.27 மற்றும் 30 தேதிகளிலேயே இரண்டு கட்டங் களாகத் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் நாளை (டிச.9-ம் தேதி) தொடங்குவதாக மாநில தேர் தல் ஆணையர் பழனிசாமி அறி வித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் மேலும் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வாக்குப்பதிவு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத் தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட் டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு இல்லாத சென்னையை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடை பெறும். இதற்கான தேர்தல் அறி விக்கை டிச.9-ம் தேதி வெளியிடப் படும். அன்று காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கும். டிச.16-ம் தேதி நிறைவடையும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கும். வாக்கு எண் ணிக்கை வரும் ஜனவரி 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.
கிராம ஊராட்சித் தலைவர் மற் றும் வார்டு உறுப்பினர் பதவியிடங் களுக்கான தேர்தல், கட்சி அடிப் படையில் இல்லாமலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப் பினர் பதவிகளுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும். முதல் கட்டமாக டிச.27-ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
இரண்டாம் கட்டத் தேர்தலில் டிச.30-ம் தேதி 158 ஊராட்சி ஒன்றி யங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,924 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி களுக்கு வாக்குப்பதிவு நடக்கும்.
இந்தத் தேர்தலில் 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப் படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்- வெள்ளை நிறத்திலும் கிராம ஊராட்சித் தலைவர்- இளஞ் சிவப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்- பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்- மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். 2 கிராம ஊராட்சிகளுக்கான பொது வான வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத் திலும் மற்றொன்றுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
இரண்டு கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 49,688 வாக்குச்சாவடி களில் வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இத்தேர்தலில் 1 கோடியே 28 லட்சத்து 25,778 ஆண், 1 கோடியே 30 லட்சத்து 43,528 பெண் மற்றும் 1,635 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70,941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மேல் புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்.
சென்னை மற்றும் திருநெல் வேலி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் ஏற் கெனவே நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் தொட ரும். அரசியல் கட்சிகளும் வேட் பாளர்களும் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.
முன்னதாக கடந்த டிச.2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 2 கட்டங்களாக டிச.27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். இதை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து கடந்த 6-ம் தேதி தீர்ப்பு வெளி யானது.
அதில் காஞ்சிபுரம், திருநெல் வேலி, விழுப்புரம், வேலூர் என 4 மாவட்டங்கள், அந்த மாவட்டங் களை பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக் குறிச்சி, திருப்பத்தூர், ராணிப் பேட்டை ஆகிய 5 மாவட்டங்கள் என 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த லாம். அந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை பணிகளை முடித்து 4 மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை தொடர்ந்து, முந்தைய தேர்தல் அறிவிப்பா ணையை நேற்று ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம், தற்போது 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை யைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங் களிலும் தேர்தலை அறிவித்து உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago