புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் 11 மாதங்களில் முடியும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

By பி.டி.ரவிச்சந்திரன்

தமிழகத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு ஜனவரி 7 ம் தேதி டெண்டர்விடப்பட்டு 11 மாதங்களில் பணிகள் முடியும், என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நடந்த ரத்ததான முகாமைத் தொடங்கிவைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரத்ததானம் செய்வதில் தமிழகம் தொடர்ந்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. 15 ஆண்டுகளில் செய்யவேண்டியதை ஒரே ஆண்டில் செய்து புதிதாக தமிழகத்திற்கு 9 மருத்துவக்கல்லூரிகளை இந்த அரசு கொண்டுவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக்கல்லூரிகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கியுள்ளது. ஜனவரி 7-ம் தேதி மருத்துவக் கல்லூரிகள் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு 11 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். புதிதாக தொடங்க உள்ள ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளிலும் 150-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றுள்ளோம், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்