ரயில் தண்டவாளங்களில் சடலமாக மீட்கப்பட்டு விவரம் கண்டறியப்படாமல் அடக்கம் செய்யப்பட்ட 400 சடலங்கள்

By செய்திப்பிரிவு

டி.ஜி.ரகுபதி

கோவை ரயில்வே உட்கோட்ட காவல்துறைக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் சடலமாக மீட்கப்பட்டு, பெயர், விவரம் கண்டறியப்படாமல் 400-க்கும் மேற்பட்ட சடலங் கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ரயில் பயணிகளின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும் ரயில்வே காவல்துறை உருவாக்கப்பட்டது. கோவை ரயில்வே உட்கோட்ட காவல்துறை யில் கோவை, திருப்பூர், ஈரோடு, போத்தனூர், மேட்டுப்பாளையம், உதகை ஆகிய காவல் நிலையங் கள் உள்ளன.

ரயில் வருவது தெரியாமல் செல்போனில் பேசிக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் தண்டவாளத்தை கடத்தல், தண்டவாளம் அருகே இயற்கை உபாதை கழித்தல், தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் தடையை மீறி கவனக் குறைவாக தண்டவாளத்தை கடத்தல் போன்ற காரணங்களினால் ரயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பலவித காரணங் களால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கை யிலானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

‘‘தண்டவாளங்களில் சடலம் கிடந்தால், சம்பந்தப்பட்ட ரயில்வேகாவல்துறையினர் சென்று சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர். இதில் பெயர், விவரம் தெரியவரும்சடலங்களை அவர்களது உறவினர் களிடம் ஒப்படைக்கின்றனர். பெயர்,விவரம் கிடைக்கப் பெறாத சடலங்களை குறிப்பிட்ட நாட்களுக்குபின்னர் ரயில்வே காவல்துறை யினரே அடக்கம் செய்து விடுகின்றனர். உயிரிழந்த 400-க்கும் மேற்பட்டோரின் பெயர், விவரம் இன்னும் தெரியாமலேயே உள்ளன. இவர்களின் விவரங்களை கண்டறிய காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்,’ என்கின்றனர் சமூகஆர்வலர்கள்.

357 பேர் உயிரிழப்பு

ரயில்வே காவல்துறையினர் கூறும்போது,‘‘கோவை மற்றும் போத்தனூர் ரயில்வே காவல் நிலையத்தில் கடந்தாண்டு 136 ஆண்கள், 19 பெண்கள் என 165 பேர் உயிரிழந்தனர். இதில் 85 ஆண்கள், ஒரு பெண் என 86 பேரின் பெயர், விவரம் இன்னும் தெரியவில்லை. நடப்பாண்டு ஜனவரி முதல் தற்போது வரை, கோவை ரயில்வே காவல்துறை உட்கோட்டத்தில் 325 ஆண்கள், 37 பெண்கள் என 357 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 92 ஆண்கள், 9 பெண்கள் என 101 பேரின் பெயர், விவரங்கள் இன்னும் தெரியவில்லை. தலை துண்டித்து, தலையில் அடிபட்டு, உடல் துண்டாகி, முகம் சிதைந்து என பல்வேறு வகைகளில் தண்டவாளங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்படுகின்றன,’’ என்றனர்.

தீவிர விசாரணை

கோவை உட்கோட்ட ரயில்வே காவல்துறை டிஎஸ்பி அண்ணாதுரை கூறும்போது,‘ரயில் மோதி உயிரிழப்பவர்களில் பெயர், விவரம் கிடைக்கப் பெறாத சடலங்கள் 3 முதல் 5 நாட்களுக்குப் பின், பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையின்போது அந்த சடலத்தின் தொடை எலும்பு எடுத்து பத்திரப்படுத்தப்படும். பின்னாளில், அவர்களின் குடும்பத்தினர் கண்டறியப்பட்டால், டிஎன்ஏ சோதனை நடத்தி உறுதி செய்ய அவை பயன்படுத்தப்படும். தொடை எலும்பு, சம்பந்தப்பட்ட சடலத்தின் புகைப்படம், அதில் இருந்த ஆடை தனியே பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும்.

பெயர், விவரம் கிடைக்காத சடலங்களின் புகைப்படங்கள், ஆடை விவரங்கள், அங்க அடையாளங்கள் மாவட்ட குற்றப்பதிவேடுக் கூடத்துக்கு அனுப்பி, அதன் மூலம் மாநில குற்ற ஆவணப்பதிவேடுக் கூடம், தேசிய குற்ற ஆவணப்பதிவேடுக் கூடத்துக்கும் அனுப்பி விசாரிக்கப்படுகிறது. மாயமான நபர்களின் புகைப்படங்களுடன் ஒத்துப் போகிறதா என விசாரணை நடத்தப்படுகிறது. 10 ஆண்டுகள் ஆனாலும், உயிரிழந்தவர்களின் பெயர், விவரத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். சமீபத்திய சில ஆண்டுகளை கணக்கிட்டால், கோவை ரயில்வே காவல்துறை உட்கோட்டத்தில் ஏறத்தாழ 400 சடலங்களின் பெயர் விவரம் இதுவரை தெரியவில்லை. இவர்களின் பெயர், விவரங்களை கண்டறியும் பணி தொழில்நுட்ப வசதிகள் மூலம் தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.

விழிப்புணர்வு தீவிரம்

‘‘ரயில் தண்டவாள உயிரிழப்புகளை தடுக்க ரயில்வே காவலர்கள் மூலம் தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களிடம், துண்டுத்தாள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ரயில் தண்டவாளங்களில் குடிபோதையில் சுற்றும் நபர்கள் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பப்படுகின்றனர்,’’ என்கின்றனர் ரயில்வே காவல்துறையினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்